
ஆட்டு மூளை பொரியல் தேவையான பொருட்கள்
ஆட்டு மூளை - இரண்டு
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1 tab sp
உளுந்தம் பருப்பு - 1 tab sp
சின்ன வெங்காயம் - 150 கிராம்
முட்டை - 2
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 /2 tab சப்
எண்ணெய் - 1 tab sp
செய்முறை :
முதலில் ஆட்டு மூளையை சிறிது உப்புடன் கலந்து பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும் பிறகு ஆட்டு மூளையை தூளாக்கிக் கொள்ளவும்.அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும்.மஞ்சள் தூள் முட்டை மற்றும் உப்பை சேர்த்து அடித்து வைத்து கொள்ளவும் .
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் உளுந்தம் பருப்பு கடுகை சேர்த்து நன்றாக தாளிக்கவும்.அதனுடம் மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கி எடுக்கவும்.அடித்து வைத்துள்ள முட்டை உப்பு மஞ்சள்தூளை சேர்த்து நன்றாக கிண்டவும்.எவை முடிந்த பிறகு ஏற்கணவ வேகவைத்துள்ள ஆட்டு மூளையை போட்டு நன்றாக கிளற வேண்டும் ..
சுவையான ஆட்டு மூளை ரெடி
No comments:
Post a Comment