Saturday, April 3, 2010

'டீ' இல் பாலை சேர்க்கக்கூடாது..


உலகம் முழுவதும் மக்கள் அதிக அளவில் விரும்பி அருந்தும் பானம் 'டீ'.இந்த 'டீ' இல் நிறைய சத்துக்கள் இருகின்றன.அனால் இத்தனை சத்துகள் இருந்தும் நாம் அதை வீணடிகிறோம்.டீ சுவையாக இருக்க நாம் சேர்த்தும் பால் இந்த சத்துகளை உறுஞ்சி எடுத்து விடும்.

வாகனத்தில் இருந்து வரும் புகை,குப்பையால் ஏற்படும் மாசு வாயு,சிகரெட் பீடி ஆகியவற்றிலிருந்து வெளியேறும் புகை போன்றவற்றல் நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.இதன் விளைவாக 'ப்ரீரேடிக்கல்ஸ்' நம் உடலில் உருவாகி ஆபத்தை ஏற்படுத்துகிறது.இதன் முலம் கேன்சர்,ஆஸ்துமா,இதய நோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

'டீ' இல் இருக்கும் 'பிளேவ்னாய்டு' என்னும் ஒருவகை பொருள் மாசுப்பொருட்களை முறியடிக்கும் தன்மை கொண்டது.நம் உடல் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்சத்துகள் 'டீ' இல் உள்ளது.மேலும் நம் உணவில் இருந்து சத்துகளை பிரித்து எடுக்கும் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6 ஆகியவை 'டீ' இல் உள்ளன.கேன்சர் கட்டிகளை தடுக்கும் பைட்டோ கெமிக்கல்,இதயம் சம்மந்தபட்ட நோய்களை தடுக்கும் பொட்டாசியம் மெக்னீஷியம் ஆகியவை 'டீ' இல் உள்ளது.மேலும் 'டீ' அருந்துவதால் நம் இதயதுடிப்பு சீராகிறது.

'டீ' இல் பாலை சேர்க்கும் போது இந்த சத்துக்கள் வீணாகிறது.'டீ' இல் சர்க்கரை அல்லது எலுமிச்சை சேர்த்துக்கொண்டால் இந்த சத்துக்கள் பதிக்கப்படாது.இதை பின்பற்றுவதால் தான் வெளிநாடுகளில் கேன்சர் பாதிப்பு குறைத்து கொண்டிருகிறது.இந்தியர்கள் நிறைய பேர் 'டீ' மற்றும் பால் சேர்த்து குடிப்பதால் கேன்சர் குறைவதில்லை.

டீ துளை வெறும் மூன்று நிமிடங்கள் மட்டும் தான் கொதிக்க வைக்க வேண்டும்.அப்பொழுது தான் டீ இன் முழு சத்தும் கிட்டும்.சிறுநீரக தொல்லை உள்ளவர்கள் டீத்துளை இரண்டு நிமிடங்கள் மட்டுமே கொதிக்க வைக்க வேண்டும்.பால் சேர்க்காமல் டீ அருந்தினால் உடலில் எதிர்ப்பு சக்தி கூடும்.

Friday, April 2, 2010

jokes


மகன் : அம்மா எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் அதுக்கு என்ன மா அவசரம்???
அம்மா : டேய் உனக்கு கல்யாணத்திற்கு அவசரம் இல்லாம இருக்கலாம்.அனால் எனக்கு அப்படி இல்ல எனக்கு டிவி, வாஷிங் மேஷின்,கிரெயின்டர் இதேல்லாம் தேவபடுத்தே...


"சும்மா சும்மா நம்ம பையன புறம்போக்குன்னு திட்டாதிங்க.."
"ஏண்டி அதுக்கு இப்போ என்ன??"
நம்ம பாகத்து வீட்டு அரசியல்வாதி அவன வளச்சுப் போட்ரபோறாரு


"ஏன் சார் உங்க மனைவி நேத்து உங்களை அடிச்சாங்களா??"
"நீங்க எப்படி கண்டுபிடிச்சிங்க??"
"உங்க வீட்ல டிவி சவுண்ட் ரொம்ப அதிகமா இருந்துச்சே..."

Wednesday, March 31, 2010

கோப்பையின் மரணம்


இது ஜென் குரு இக்கியு வின் வாழ்கையில் நடந்த ஒரு சம்பவம்
ஒரு முறை ஜென் குரு இக்கியு இளைஞராக இருந்த போது ஒரு ஆசிரமத்தில் சீடராக இருந்தார்.அவரின் குருவிற்கு தாகம் எடுத்தது ஜென் னை அழைத்து தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்.ஜென் தண்ணீர் கோப்பையை கொண்டு வரும் பொது அது கை நழுவி கீழே விழுந்தது.ஜென் னை பிடிக்காத சிலர் 'ஜென் இன்று குருவிடம் நன்றாக மாட்டிக்கொண்டான்' இன்று கிண்டல் அடித்தனர்.

இதை பார்த்த இக்கியு குருவிடம் கேட்டார் 'குருவே மரணம் என்பது வருந்ததக்கதா?' என்றார்.அதற்கு குரு 'மரணம் என்பது இயல்பானது என்றும் அதற்கு வருத்தப்பட தேவையில்லை என்றார்.உடனே இக்கியு குருவிடம் 'குருவே உங்கள் தேநீர்க் கோப்பை மரணம் அடைந்து விட்டது வருத்தப் படாதீர்கள்' ஏன்று சொன்னார்.

jokes


டாக்டர் : வாங்க என்ன பிரச்னை உடம்பிற்கு?
நோயாளி : டாக்டர் ... ரெண்டு நாளா காஸ் டிரபுள் அதனால சாப்பிட முடியல
டாக்டர் : அட பாவமே ! உடனே போய் காஸ் சிலிண்டர் ஒன்ன புக் பண்ணி நல்ல
சாப்பிடுங்க


"அங்க போறனே அவன் சரியான கஞ்சப் பேர்வழி ..."
"அவரோட பையன் எப்படி பட்டவன்??"
"அவன?? அவன் சரியான கஞ்சா பேர்வழி...


"எனங்கே நான் தீபாவளிக்கு எடுக்கணும் அதனால ஜவுளி கடைக்கு போறேங்க"
"சரி சரி..போயிட்டு மறக்காம லெட்டர் போடு"

Tuesday, March 30, 2010

ஆட்டு மூளை பொரியல்


ஆட்டு மூளை பொரியல் தேவையான பொருட்கள்

ஆட்டு மூளை - இரண்டு
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1 tab sp
உளுந்தம் பருப்பு - 1 tab sp
சின்ன வெங்காயம் - 150 கிராம்
முட்டை - 2
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 /2 tab சப்
எண்ணெய் - 1 tab sp

செய்முறை :

முதலில் ஆட்டு மூளையை சிறிது உப்புடன் கலந்து பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும் பிறகு ஆட்டு மூளையை தூளாக்கிக் கொள்ளவும்.அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும்.மஞ்சள் தூள் முட்டை மற்றும் உப்பை சேர்த்து அடித்து வைத்து கொள்ளவும் .

பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் உளுந்தம் பருப்பு கடுகை சேர்த்து நன்றாக தாளிக்கவும்.அதனுடம் மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கி எடுக்கவும்.அடித்து வைத்துள்ள முட்டை உப்பு மஞ்சள்தூளை சேர்த்து நன்றாக கிண்டவும்.எவை முடிந்த பிறகு ஏற்கணவ வேகவைத்துள்ள ஆட்டு மூளையை போட்டு நன்றாக கிளற வேண்டும் ..

சுவையான ஆட்டு மூளை ரெடி

நண்டு மசாலா


நண்டு மசாலா செய்ய தேவையான பொருட்கள் :

நண்டு பெரியது : 3
தக்காளி : 2
இஞ்சி : 1
பூண்டு : 1
பெரிய வெங்காயம் : 2
குடை மிளகாய் : 1
மிளகு துள் : 1 /2 tab sp
மிளகாய் தூள் : 1 tab sp
உப்பு : தேவையான அளவு
எண்ணெய் : தேவையான அளவு
தனியா தூள் : 1 /2 tab சப்
சோளமாவு : சிறிது அளவு

முதலில் நண்டை நன்றாக கழுவி அதன் பிறகு நண்டை சோள மாவில் பிசையவும் பிறகு பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு ஆகியவற்றை நைசாக அரைத்து சேர்க்கவும்

கொஞ்சம் எண்ணையை வானலியில் உற்றி வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் .பிறகு பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு ஆகியவற்றை சேர்த்து பச்சை மணம் போகும் வரை வதக்கவும்.வதக்கிய பிறகு தக்காளி குடை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.பின்னர் உப்பு தனியாத்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.சிறிது நேரத்தில் கலவை கட்டி ஆகிவிடும் இதில் நண்டு துண்டுகளை நன்றாக வேக விட வேண்டும்.வேகவைத்த நண்டு நன்றாக சுண்டியவுடன் பரிமாறவவும் சுவையான நண்டு மசாலா ரெடி.

முத்த கட்சிகளைப் பற்றி த்ரிஷா கருத்து


விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷா சிம்பு முத்த கட்சிகள் இடம் பெற்றுள்ளன, அதற்கு த்ரிஷாவிடம் கருத்து கேட்டதற்கு முத்தக் கட்சிகள் படதிற்கு தேவை பட்டதாலும் டைரக்டர் கேட்டுகொண்டதலும் நடித்தேன் என்றார்.மேலும் தனக்கு இப்போழுது சினிமா வில் நல்ல இடம் கிடைத்துள்ளது நான் நல்ல நிலையை அடைந்துள்ளேன்.நான் முத்தக் கட்சிகளிலோ நீச்சல் உடையிலோ நடிக்க மாட்டேன் என்று எப்பொழுதும் சொல்ல மாட்டேன்,கதைக்கு தேவைப்பட்டாள் கண்டிப்பாக நடிப்பேன்.

எனக்கு விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றி படமாகக அமைந்துள்ளது.நான் நிறைய படங்களில் நடித்துள்ளேன் அனால் விண்ணைத்தாண்டி வருவாயா வில் நடித்ததர்க்க எனது நண்பர்கள் மட்டும் ரசிகர்கள் நிறைய பேர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.ஜெஸ்ஸி போன்ற கேரக்டர் அமைவது அரிது ...

Monday, March 29, 2010

வீட்டு பொருளை சுத்தம் செய்ய?

வீட்டில் உள்ள மிக்ஸ்சி, grinder , fridge மற்றும் ஓவன் போன்ற பொருளை நன்றாக சுத்தம் செய்ய சிறிது அளவு டூத் பேஸ்ட் தண்ணீரில் கரைத்து அதன் பிறகு sponge இ நனைத்து துடைத்து பிறகு சுத்தமான துணியால் துடைத்தல் மினு மினுக்கும்..

எண்ணெய் பிசுக்கு போக?

சமையல் அறை மற்றும் பூஜை அறையில் உள்ள எண்ணெய் பத்திரம் மற்றும் பாட்டிலில் தொட முடியாத அளவுவிற்கு எண்ணெய் பிசுக்கு ஏறி விட்டதா??கவலை வேண்டாம் பாட்டிலை நன்றாக மூடி அதை அரிசி மாவால் தெய்து பிறகு துணியால் துடைத்து விடுங்கள் பாட்டில் பளபளபாகும்

கூல் ட்ரிங்க்ஸ் பாட்டிலில் வாசனை போக?

வீட்டில் நீங்கள் கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில்லை எத்தணை முறை கழுவியும் வாசனை போக வில்லையா? இதற்கு கொஞ்சம் தயிர் அல்லது மோரை சிரிது அளவு பாட்டிலில் உற்றி அதன் பிறகு கொஞ்சம் தண்ணீரை உற்றுங்கள் ஒரு நாள் விட்டு மறுநாள் அதை கழுவினால் வாசனைஇருக்காது

Fried ரைஸ் சுவையாக இருக்க


நீங்கள் fried ரைஸ் அல்லது தேங்காய் சாதம் போன்றவற்றை செய்யும் பொது முதலில் சிறிது அளவு எண்ணையில் கசகசாவை ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தாளித்து அதற்கு பிறகு மசாலா பொருட்களை சேர்த்தல் மிகவும் சுவையாகஇருக்கும்

செலவு


காதலால்
நீ சேர்த்து வைத்த
சோகமெல்லாம்
செலவாகின்றது
என் கண்ணீர் வழியாக
நன் சேர்த்து வைத்த
சந்தோசம் மட்டும்
செலவாகின்றது
உன் புன்னகை
வழியாக

வறுமை & செழுமை

வறுமை
என்பது
எதுவுமே இல்லததால் பட்டினி கிடப்பது

செழுமை
என்பது
எல்லாம் இருந்தும் diet யில் இருபது

வாய்சொல்

மறைந்தாலும்
சிலர் சொல்லில்
வாழ்ந்து கொண்டு
இருகிறார்கள்

வாழ்தாலும்
சிலர் சொல்லால்
இறந்து கொண்டு
இருகிறார்கள்

வாய்சொல் என்பது
வெறும் வார்த்தை
அல்ல
வாழ்கையும் கூட தான்

stop child labour


மருதாணி இடாமல் சிவந்தது??
வெட்கபடும் காதலியின்
கன்னம் மட்டும் அல்ல

கல் உடைக்கும்
சிறுமியின் விரல்கள்
கூட தான்..

காதல்


உங்கள் வாழ்கையில்
காதல் இல்லை என்றால்???
எதையோ
இழந்து விட்டீர்கள்
என்று அர்த்தம்...

காதல் இருந்தால்???
எல்லாத்தையும்
இழந்து விட்டீர்கள்
என்று அர்த்தம்...